சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Divya

சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Divya

நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் நடப்பது அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸ் முதல் பெரியவர்கள் சாப்பிடும் உணவுகள் வரை அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது நடத்தப்படும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.வியாபாரிகள் உணவுப் பொருட்களில் போலி உருவாக்குவது,பழங்களில் இரசாயனம் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகின்றனர்.

இதில் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் உப்பு,சர்க்கரையில் நானோ பிளாஸ்டிக் கலப்பது ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.இந்த நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்பட்ட சர்க்கரை,உப்பை பயன்படுத்தினால் நமது இரத்தத்தில் அவை கலந்துவிடும்.

இந்த நானோ பிளாஸ்டிக் துகள்கள் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை பிராண்டுகளிலும் கலக்கப்படுகிறது என்ற தகவல் மக்களை கதிகலங்க வைக்கிறது.நம் நாட்டின் முன்னணி உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.

சர்க்கரை மற்றும் உப்பில் கலக்கப்படும் இந்த நானோ பிளாஸ்டிக் துகள்களானது ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும்.இந்த மைக்ரோ நானோ துகள்கள் கலக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தினால் நாளடைவில் உடல் உறுப்புகள் சேதமாகிவிடும்.

உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரித்தல்,உடல் வீக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த நானோ துகள்கள் இரத்தத்தில் கலக்கும் பொழுது அவை விஷமாக மாறிவிடும்.மைக்ரோ துகள்கள் உடலில் சேர்ந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிடும்.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தி வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை ஏற்படும்.இந்த நானோ பிளாஸ்டிக் துகளால் உடலில் புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.