உங்க வீட்டில் எலி தொல்லையா?இதை மட்டும் வைத்தால் போதும் எலி வீட்டுப் பக்கமே வராது!

Photo of author

By Kowsalya

உங்க வீட்டில் எலி தொல்லையா?இதை மட்டும் வைத்தால் போதும் எலி வீட்டுப் பக்கமே வராது!

உங்கள் வீட்டில் எலிகள் இருக்கிறதா? அதை எப்படி விரட்டலாம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறீர்களா? இரண்டு பொருள் தான்! எப்பேர்ப்பட்ட எலியாக இருந்தாலும் உங்கள் வீட்டு பக்கம் கால் அடி கூட எடுத்து வைக்காது.

தேவையான பொருட்கள்:

1.தூள் புகையிலை – 1 பாக்கெட்

2. வெறும் மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன் (அதிக காரம் உள்ளது)

செய்முறை:

தூள் புகையிலை என்று கடைகளில் விற்கும். அது வெறும் 10 ரூபாய் மட்டும்தான் இருக்கும்.கடையில் தூள் புகையிலை என்று வாங்கிக் கொள்ளுங்கள்.

1.ஒரு Bowl எடுத்து அதில் சிறிது தூள் புகையிலை எடுத்துக் கொள்ளவும்.

2. காரம் அதிகமுள்ள வெறும் மிளகாய்த்தூள் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த கலவையினை எங்கேங்கே வீட்டில் எலி வருகிறதோ அந்த இடத்தில் லேசாக தூவி விடுங்கள். வீட்டின் சமையல் அறை, குடோன், கார் உட்பகுதியில் என லேசாக தூவி விடுங்கள்.

எலிக்கு புகையிலையின் வாசம் பிடிக்காது அதுபோல அதிக காரம் அதற்கு ஆகாது.எனவே ஒரு முறை வந்து பார்த்து விட்டால் அந்த வாசனையை வைத்தே அது வீட்டு பக்கம் வராது.

செடிகள் வைத்திருந்தால் செடிகளுக்கு மேல் தூவாமல் கீழ்பகுதியில் தூவி விடுங்கள்.

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால். இரவில் தூவி விட்டு காலையில் சீக்கிரமாக எழுந்து அதனை சுத்தம் செய்து விடுங்கள்.

இது முழுக்க முழுக்க முயற்சி செய்து பார்த்த ஒரு முறையாகும்.கண்டிப்பாக செய்து பாருங்கள்.