இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…

0
151

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…

 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இதனால் அங்கு போர்க்களம் நடந்தது.இதைத்தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்து வந்தால் சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையும்மீறி போராட்டத்தை கைவிடாமல் மேற்கொண்டால் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் நேற்றிரவு கொழும்பிலுள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் எவராலும் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டது.அதையும் மீறி அவசரஅவசரமாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு போர்டுகளை அகற்ற முயற்சித்தனர்.

இந்நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.இதுமட்டுமல்லாமல் அதிபர் மாளிகை சுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் இராணுவ படையினர் போடப்பட்டது.இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

 

Previous articleகொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர்… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விலகல்?
Next articleகுடியரசு தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள்… தமிழகத்தில் எத்தனை தெரியுமா?