குடியரசு தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள்… தமிழகத்தில் எத்தனை தெரியுமா?

0
130

குடியரசு தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள்… தமிழகத்தில் எத்தனை தெரியுமா?

நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்று அடுத்த குடியரசு தலைவர் ஆகிறார்.

நாட்டின் 16வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவும், போட்டியிட்டனர்.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள்.

இதையடுத்து நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் 70 சதவீத வாக்குகளைப் பெற்று திரௌபதி முர்மு குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 53 செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்கு சீட்டு முறையில் குடியரசு தலைவருக்கான தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. இந்த 53 வாக்குகளில் ஒன்று தமிழக சட்டமன்றத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செல்லாத ஓட்டு போட்ட அந்த நபர் யாராக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.