காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!!

Photo of author

By Sakthi

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!!
காலையில் நேரத்தில் எழுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பார்த்த பிறகு நீங்களும் காலையில் நேரத்தில் எழுந்து விடுவீர்கள்.
அதிகாலையில் எழுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது மேலோட்டமாக  தெரிந்தாலும் நம்மில் பலருக்கும் முடியாத கடினமான காரியமாக இன்றளவில் இருப்பது அதிகாலையில் நேரத்தில் எழுவது தான். நாளை நேரத்தில் எழுந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் அலாரம் வைத்து தூங்கி விட்டு காலையில் அலாரம் அடிக்கும் பொழுது அதை அனைத்துவிட்டு மீண்டும் தூக்குபவர்களாகத் தான் தற்பொழுது இருக்கின்றோம்.
ஆனால் அதிகாலையில் நேரத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் தெரிவது இல்லை. அதிகாலையில் நேரத்தில் எழும்பொழுது அந்த நாளை சிறப்பாக நல்ல நோக்கத்துடன் தொடங்க உதவும். அதிகாலையில் நேரத்தில் எழுந்தால் கிடைக்கும் அலைகள் பற்றி பார்க்கலாம்.
* அதிகாலையில் நேரத்தில் எழும்பொழுது மூளை சுறுசுறுப்படையும். மூளை மற்றும் நரம்பு இயக்கம் சீராக இருக்க உதவி செய்யும்.
* அதிகாலையில் நேரத்தில் எழும் பழுது மன அழுத்தம் குறையும்.
* காலையில் நேரத்தில் எழுந்தால் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைக்கின்றது.
* அதிகாலையில் நேரத்தில் எழும்பொழுது காலை நேரத்தில் பசியை தூண்டும். இதனால் காலையில் சாப்பிடும் பொழுது உடல் பருமன், சர்க்கரை நெய் வருவது குறையும்.
* அதிகாலையில் நேரத்தில் எழும்பொழுது இரவு 9 அல்லது 10 மணிக்கு தானாக தூக்கம் வரும். இரவு சரியான நேரத்திற்கு தூங்குவதால் மன அழுத்தம், இரத்த அழுத்தம் பிரச்சனைகள் இருக்காது. வளர்சிதை மாற்றங்கள் சீராக இருக்கும்.
* காலையில் நேரத்தில் எழுந்து தூய்மையான காற்றை சுவாசிக்கும் பொழுது நுரையீரலுக்கு வலிமை ஏற்படுகின்றது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
* அதிகாலையில் நேரத்தில் எழும் பொழுது சரியான நேரத்தில் சிறுநீர், மலம் கழிந்து உடலில் உள்ள நச்சுக் கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடுகின்றது.