செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!!

0
101

 

 

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா…

 

காப்பர் என்று அழைக்கப்படும் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் என்னென்ன பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ்ததால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் நாம் அனைவரும் உடலில் எதோ ஒரு வியாதியுடன் வாழ்ந்து வருகிறோம். அதற்கு காரணம் நவீன காலத்தின் உணவு முறைதான் காரணம்.

 

அந்த காலத்தில் மக்கள் அனைவரும் செம்பு குடத்தில் தண்ணீர் ஊற்றி அதை குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைத்து நோய் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் இந்த காலத்தில் அனைவருடைய வீட்டிலும் பிளாஸ்டிக் குடங்கள் தான் உள்ளது. அதில் தண்ணீர் வைத்து தான் நாம் எல்லாரும் பயன்படுத்துகிறோம். மேலும் தண்ணீர் குடிப்பதற்கு பிளாஸ்டிக் கேன்களை பயன்படுத்துகிறோம். இதனால் நமக்கு பல தீமைகள் தான் கிடைக்கின்றது.

 

செம்பு பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் நம் வீடுகளில் இனி பிளாஸ்டிக் குடங்கள் இருக்காது. இந்த பதிவில் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

 

* செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் இருக்கும் எலும்புகள் வலு பெறும். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடலில் செம்பு சத்துக்கள் அதிகமாகி எலும்புகள் வலுப் பெறும்.

 

* செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி நாம் தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்படாது.

 

* நமக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது என்றால் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

 

* செம்பு பாத்திரத்தின் மூலமாக தண்ணீர் குடிப்பதால் இதயத்தின் ஆரேக்கியம் அதிகரிக்கும்.

 

* செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் மேம்படைகின்றது.

 

* செம்பு பாத்திரத்தின் மூலமாக தண்ணீர் குடிப்பதால் உடலில் அமிலத்தன்மை குறைகின்றது. இதனால் இதய எரிச்சலும் குறைகின்றது.

 

* காப்பர் பாத்திரத்தின் முலமாக தண்ணீர் குடிப்பதால் செரிமானம், அஜீரணம், வயிற்றுப் புண், வயிறு வலி, வயிறு எரிச்சல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

 

* கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் காப்பர் பாத்திரத்தில் மூலமாக தண்ணீர் குடிப்பதும் ஒரு வழிமுறை ஆகும்.

 

* நம் உடலை வெளிப்புறமாக சுத்தம் செய்ய பல வழிமுறைகளை பின்பற்றும் நாம் அனைவரும் உடலை உட்புறமாக சுத்தம் செய்வதற்கு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்வதில்லை. உடலை உட்புறமாக சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நாம் அனைவரும் காப்பர் பாத்திரம் மூலமாக தண்ணீர் குடிக்கலாம்.

 

Previous articleபற்கள் மஞ்ச மஞ்சளாக இருக்கின்றதா… அப்போ இந்த ஒரு உருண்டையை வைய்யுங்க… மஞ்சள் பள் வெள்ளை ஆகிரும்!!
Next articleபுதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில் விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!