ஒரு நாள் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஞாபகம் மறதி சளி இருமல் உடல் சோர்வு அனைத்தும் நீங்கும்!

Photo of author

By Amutha

ஒரு நாள் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஞாபகம் மறதி சளி இருமல் உடல் சோர்வு அனைத்தும் நீங்கும்

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பனங்கற்கண்டு பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மறந்துவிட்ட நமது பாரம்பரியமான பனங்கற்கண்டு பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன எனவும் பார்ப்போம்.

ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1. நம் வேண்டாத ஏதேனும் பொருட்களை சாப்பிடும் போதோ, பருவ கால மாற்றத்தின் போதும் தொண்டை கம்முவது போல் இருக்கும். அதாவது தொண்டை கரகரவென இருக்கும். மறுநாள் சளி பிடிக்கத் தொடங்கும். இந்த சமயத்தில் ஒரு ஸ்பூன் கல்கண்டு சாப்பிட்டு அதன் உமிழ்நீரை விழுங்கினாலே போதும் அந்த தொண்டை கரகரப்பும் குறையும் சளி பிடிப்பதற்கான ஒரு அறிகுறியும் இருக்காது.

2. சில பேருக்கு பனி காலத்தில் மழைக்காலத்தில் சளி பிடித்து விட்டது. அதிகம் இருமல் வருகிறது. முன்னரே பனங்கற்கண்டு சாப்பிடவில்லை.சளி பிடித்த பிறகு என்ன செய்வது? இவர்கள் பனங்கற்கண்டுடன் மிளகு 10 பொடி செய்து அதனுடன் கால் ஸ்பூன் நெய் சேர்த்து மூன்று வேலை சாப்பிடவும்.சளி கட்டாயம் குறையும்.

3. அடுத்து வாய் துர்நாற்றம். நிறைய பேர் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறு வயிற்று எரிச்சல் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றால் அவதிப்படுவர். இவர்கள் பனங்கற்கண்டுடன் சீரகத்தை சேர்த்து மென்று சாப்பிட அல்லது அதன் உமிழ் நீரை விழுங்க வாய் துர்நாற்றம் அறவே நீங்கிவிடும்.

4. அடுத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை சோர்வு. தற்போது மொபைல் போன் லேப்டாப், வீடியோ கேம், என பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு கண் பார்வை குறைதல் மூளை சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இதனால் ஞாபக மறதியும் அதிகமாகிறது.

இவர்களுக்கு பனங்கற்கண்டு 50 கிராம் பாதாம் 50 கிராம் சீரகம் அல்லது பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் கலந்து மிக்ஸி ஜாரில் பொடி செய்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். தினமும் காலை ஒரு ஸ்பூன் தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் அல்லது பாலில் கலந்தும் குடிக்கலாம்.

இதன் மூலம் மூளை சோர்வு குறையும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். கண் மங்கல் தன்மை குறையும் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக சக்தி அதிகமாகும். தேர்வு சமைத்தல் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது மிகவும் நல்லது.

5. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அல்லது குறைந்து விட்டது என எண்ணுபவர்கள் 50 கிராம் பனங்கற்கண்டுடன் 50 கிராம் பாதாமை மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுடன் சேர்த்து அரைத்து அந்த பவுடரை பாலில் சேர்த்து குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.