எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

Photo of author

By Sakthi

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

Sakthi

Updated on:

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

 

எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சை பழமானது நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது.

 

எலுமிச்சை பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் A, B3, B6, C, E போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் எலுமிச்சை பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த எலுமிச்சை பழத்தை சாறாக அருந்தலாம். மேலும் உணவில் பயன்படுத்தலாம்.

 

இந்த எலுமிச்சையில் உள்ள நன்மைகள்…

 

* எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் நம் உடலில் செரிமானம் மேம்படுகின்றது.

 

* எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் நம் உடலில் நீர்ச்சத்து தக்கவைக்கப்படுகின்றது.

 

* எலுமிச்சை பழம் உடலில் பிஎச் அளவை சமநிலைப்படுத்துகின்றது.

 

* எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகின்றது.

 

* இந்த எலுமிச்சை பழம் நம் உடலில் குடல் இயக்கத்தை மேம்படுத்துகின்றது.

 

* எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

 

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

 

* எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்வதால் கல்லீரல், சிறுநீரகம், இரத்தம் சுத்தப்படுத்தப்படுகின்றது.

 

* எலுமிச்சை பழத்தை நாம் சாறாகவோ அல்லது உணவில் கலந்து சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் தோன்றுவதை தடுக்கலாம்.

 

* எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது சருமம் பளபளப்பு அடைகின்றது.

 

* ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சை எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

 

* இந்த எலுமிச்சை நமக்கு ஏற்படும் இதய நோய்களை தடுக்கின்றது.