வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

Photo of author

By Parthipan K

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பொதுவாகவே அனைத்து பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அவ்வாறு வேர்க்கடலையில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.

வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட் குறைவாகவும்,புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இவ்வாறு இந்த சத்துக்கள் நிறைந்திருப்பதனால் உடல் எடையை குறைக்க பெரிதளவும் பயன்படுகிறது.

வேர்க்கடலையில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அதனால் தான் நாம் அதனை எண்ணெய்யாக தினமும் சமையலில் பயணபடுத்தி வருகின்றோம்.

மேலும் வேர்க்கடலையில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது.ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும். வேர்க்கடலை ரத்த நாளங்களை சுத்தப்படுத்தவும் அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ரத்த குழாயில் ஏற்படும் அடைப்பு இதய நோய்களை தடுக்கவும் பயன்படுகிறது.

இதனை சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் வேர்க்கடலை தினமும் சாப்பிட்டு வர இளமை தோற்றமாக காணப்படலாம். அதனால் தினமும் சிறிதளவு வேர்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.