அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா?

0
241
#image_title

அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா?

1)காமாட்சி விளக்கு

நம் வீட்டு பூஜை அறையில் கட்டாயம் காமாட்சி விளக்கு இருக்கும். இந்த விளக்கிற்கு பெரும் சக்தி உள்ளது. எந்த ஒரு சுப காரியத்திற்கும் இந்த விளக்கை ஏற்றி வழிபடுவது வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.

2)குத்து விளக்கு

இந்த விளக்கு செங்குத்தாக நிமிர்ந்து நிற்கும். இந்த விளக்கு மங்கலகரமான காரியங்களில் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

3)பாவை விளக்கு

ஒரு மங்கை கையில் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் பாவை விளக்கு தோற்றம் கொண்டிருக்கும்.

4)தீபங்களின் வகைகள்

நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத தீபம், புஷ்பதீபம், வியாக்ர தீபம், விருக்ஷ தீபம், கூர்ம தீபம், நட்சத்திர தீபம், ஹம்ஸ தீபம், கும்ப தீபம், குக்குட தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என்று 16 வகைகள் உள்ளது.

5)விளக்கு வகைகள்

தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, வாடா விளக்கு, நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறா விளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, கிளித்தூக்கு விளக்கு.

6)பூஜை விளக்கு வகைகள்

கணநாயக தீபம், வித்யாதர தீபம், சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் என்று 9 வகை உள்ளது.

7)கோவில் விளக்கு வகைகள்

சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு.

8)கை விளக்கு வகைகள்

கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு.

9)நால்வகை திக்பாலர் தீபங்கள்

ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

10)அஷ்ட கஜ தீபங்கள் வகைகள்

சார்வ பௌம தீபம், சுப்ரதீபம், ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், பித்ர தீபம்.