கை மற்றும் கால்களுக்கு அழகு சேர்ப்பது நகங்களே.அழகான வெண்மையான பளபளப்பான நகம் இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆசைப் படுகின்றனர்.ஆனால் பூஞ்சை தொற்று,நக பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் அவை சொத்தையாகிவிடுகிறது.
இந்த நக சொத்தையை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.இதில் தங்களுக்கு விருப்பனான ஒன்றை செய்து கால் நக சொத்தைக்கு தீர்வு காணுங்கள்.
தீர்வு ஒன்று
*கற்பூரவல்லி இலை
*தேங்காய் எண்ணெய்
அடுப்பில் கடாய் வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சிறிது சூடானதும் நான்கு கற்பூரவல்லி இலையை பொடியாக நறுக்கி அதில் போட்டு காய்ச்சவும்.
இந்த கற்பூரவல்லி எண்ணெயை ஆறவைத்து கால் விரல் நகங்களுக்கு அப்ளை செய்து வந்தால் நக சொத்தை குணமாகும்.
தீர்வு இரண்டு
*பூண்டு பற்கள்
*விளக்கெண்ணெய்
பாத்திரம் ஒன்றில் 50 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றவும்.பிறகு இரண்டு பூண்டு பற்களை இடித்து அதில் போட்டு அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
இந்த எண்ணெயை ஆறவைத்து கால் விரல் நகங்ககுக்கு அப்ளை செய்வதால் சொத்தை குணமாகும்.
தீர்வு மூன்று
*வேப்பிலை
*,மஞ்சள்
ஒரு கைப்பிடி வேப்பிலையை அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கால் நகங்கள் மீது பூசினால் நக சொத்தை குணமாகும்.
தீர்வு நான்கு
*தேங்காய் எண்ணெய்
*சின்ன வெங்காயம்
15 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காய சாறு சேர்த்து காய்ச்சி கால் விரல் நகங்ககள் மீது பூசி வந்தால் நக சொத்தைக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.
தீர்வு ஐந்து
*தேங்காய் எண்ணெய்
*,மஞ்சள் தூள்
50 மில்லி தேங்காய் எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நக சொத்தை மீது பூசினால் விரைவில் அவை குணமாகும்.
தீர்வு ஆறு
*கற்றாழை ஜெல்
*தேங்காய் எண்ணெய்
இரண்டு துண்டு கற்றாழை ஜெல்லை இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணையில் போட்டு சிறிது சூடாக்கி கொள்ளவும்.இந்த எண்ணெயை நக சொத்தை மீது பயன்படுத்தினால் உரிய நிவாரணம் கிடைக்கும்.