பெண்களே சுயத் தொழில் தொடங்க விருப்பமா? அப்போ அரசு வழங்கும் 1 கோடியை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Gayathri

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக சுயத் தொழில் மற்றும் ஸ்மார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் பெண்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது.

இன்றைய உலகில் பெண்கள் பொருளாதார அடிப்படையில் பிறரை சார்ந்து இருக்காமல் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படுகிறார்கள்.அதற்காக சுயத் தொழில் போன்ற பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால் சுயத் தொழில் தொடங்க அதிக நிதி தேவைப்படுவதால் பல பெண்களின் ஆசை நிறைவேறாமல் போகிறது.

இந்நிலையில் சுயத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ.10,00,000 முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் “ஸ்டார்ட் அப் ஆப் இந்தியா” என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு கடனுதவி வழங்கி வருகிறது.

சுயத் தொழில் தொடங்கும் பெண்கள்,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் வழங்க ஸ்டார்ட் அப் ஆப் இந்தியா என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

ஸ்டார்ட் அப் ஆப் இந்தியா திட்டத்தின் கடன் பெறுவது எப்படி?

18 வயது நிரம்பிய பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.நீங்கள் தொடங்க உள்ள தொழில் பசுமை சார்ந்து இயக்க வேண்டும்.தொழிலுக்கான திட்ட வடிவம் அதாவது பிளான் இருக்க வேண்டும்.ஆதார்,பான் அட்டை,தொழில் செய்ய நிலம் போன்றவை இருந்தால் மாவட்ட தொழில் மையத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.உங்கள் தொழில் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் பொதுத்துறை வங்கிகளுக்கு உங்கள் விண்ணப்பம் அனுப்பப்படும்.பிறகு உங்கள் தோழிலுக்கு தேவையான கடனை வங்கிகள் வழங்கும்.