உங்களில் சிலர் படு சுத்தமாக இருக்க விரும்புவீர்கள்.வெளியில் சென்று வந்தால் கை,கால்களை கழுவி சுத்தம் செய்வது வேறு.ஆனால் வீட்டிற்குள் இருக்கும் பொழுதே சிலர் எந்நேரமும் கை கால்களை கழுவி கொண்டே இருப்பார்கள்.
எந்த ஒரு பொருளை தொட்டாலும் உடனே கைகளை கழுவுதல் அதிலும் சானிடைசர் பயன்படுத்தி அடிக்கடி கழுவுதல் போன்ற பழக்கம் பலரிடம் இருக்கிறது.சிலர் இதை ஒரு வழக்கமாகவே மாத்திக் கொண்டுள்ளனர்.
கை மற்றும் கால்களில் அழுக்கு இருந்தால் சுத்தம் செய்வதில் தவறு இல்லை தான்.இருப்பினும் அதீத சுத்தகாரர் போன்று இருந்தால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சுத்தமாக இல்லாவிட்டால் என்ன பிரச்சனைகள் வருமோ அதேபோல் தான் அதிக சுத்தமாக இருந்தாலும் உடல் நலப் பிரச்சனை ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சிலர் தங்கள் குழந்தைகளை எப்பொழுதும் கை கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.பிள்ளைகள் ஒரு பொருளை தொட்டால் கூட உடனே சானிடைசரை கைகளில் அப்ளை செய்துவிடுகின்றனர்.இதனால் குழந்தைகள் சுத்தமாகிவிடுவார்களா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில்.
காரணம் நமது உடலில் இயற்கையாவே பாக்டீரியாக்கள் வளர்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் என்னதான் சுத்தமாக இருந்தாலும் நமது உடலில் பாக்டீரியா உருவாவதை தடுக்க முடியாது.அதேபோல் அதிக சுத்தமாக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுமாம்.
வளரும் பிள்ளைகளை மண்ணில் விட்டு விளையாட வைக்க வேண்டும்.சுத்தம் என்ற பெயரில் அவர்களை தனித்து விட்டு விடாதீர்.இதனால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
குழந்தைகளை நன்றாக விளையாட வைக்க வேண்டும்.இயற்கையான சூழலோடு ஒன்றி வாழ்ந்தால் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் சக்தி நமது உடலுக்கு கிடைக்கும்.அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கைவிட வேண்டும்.நாம் சுத்தத்தை கடைபிடிப்பதில் கூட கட்டுப்பாடோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது.