முரட்டு அசைவப் பிரியரா நீங்கள்? இந்த விஷயம் தெரிந்தால்.. இனி அதை குறைச்சிடுவீங்க!!

Photo of author

By Divya

முரட்டு அசைவப் பிரியரா நீங்கள்? இந்த விஷயம் தெரிந்தால்.. இனி அதை குறைச்சிடுவீங்க!!

Divya

நம் இந்தியாவில் சைவம் மற்றும் அசைவப் பிரியர்கள் அதிகம் இருக்கின்றனர்.முன்பை காட்டிலும் தற்பொழுது அசைவப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.தினமும் அசைவம் இல்லாமல் சாப்பிட முடியாது என்பது பலரின் நிலையாக உள்ளது.எண்ணெயில் வறுத்த,பொரித்த அசைவ உணவுகளின் ருசி நாவில் ஒட்டிக் கொண்டதால் அடிக்கடி அசைவம் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

அசைவத்தில் கோழி இறைச்சி,காடை,ஆட்டிறைச்சி,பன்றி இறைச்சி,மீன் என்று வகைகயாக இருப்பினும் பெரும்பாலானோர் விரும்பி உண்பது என்னவோ பிராய்லர் தான்.இறைச்சியில் இரும்புச்சத்து,புரதம்,கால்சியம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

என்னதான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தவையாக இருந்தாலும் இறைச்சியில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.சிலவகை இறைச்சிகளால் இதய நோய்,இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.எனவே அசைவத்தை குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

அசைவ உணவிற்கு இணையான சைவ உணவுகள் பல உள்ளன.தினமும் வண்ண உணவுகளை எடுத்துக் கொண்டாலே அசைவத்திற்கு இணையான சத்துக்கள் கிடைத்துவிடும்.

வெள்ளை நிற உணவு உணவான தயிர்,இட்லி போன்றவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பச்சை நிற உணவான கீரைகள்,பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அதேபோல் நார்ச்சத்து,புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகள் அதிகம் உள்ளது.

மட்டன்,சிக்கன் போன்ற இறைச்சிக்கு மாற்றாக சோயா,பலாப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.மீனுக்கு இணையான சைவ உணவு ராஜ்மா ஆகும்.இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.கால்சியம் சத்து கிடைக்க பாதாம்,தேங்காய் பால்,சோயா பால் போன்றவற்றை பருகலாம்.

புரதச்சத்து கிடைக்க பீன்ஸ்,பச்சை பட்டாணி,சோயா,உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.அசைவம் சாப்பிடுவது அவரவர் விருப்பம்.இருப்பினும் அடிக்கடி அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு அசைவத்திற்கு இணையான சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.