பிராய்லர் கோழி விரும்பி உண்பவர்களா நீங்கள்.. அப்போ இது உங்களுக்கான அலார்ட்!!
மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பி உண்ணும் அசைவ உணவுகளில் முதலிடத்தில் இருப்பது பிராய்லர் கோழி(Broiler Chicken).மற்ற இறைச்சி வகைகளை காட்டிலும் இதன் விலை சற்று குறைவு என்பதால் மக்கள் அதிகம் வாங்கி சமைத்து உண்கிறார்கள்.இதில் பிரியாணி,வறுவல்,சில்லி, கிரேவி என்று பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அசைவ உணவகங்களில் இந்த பிராய்லர் உணவுகள் அதிகம் விற்கப்படுகிறது.இதன் சுவை சுண்டி இழுக்கும் என்றாலும் இதனை உண்பதால் கிடைக்கும் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.பொதுவாக நாட்டு கோழி வளர்ந்து அவற்றை உண்பதற்கு குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த பிராய்லர் கோழி 12 வித கெமிக்கல்களை பயன்படுத்தி ஒரே மாதத்தில் எடை கூடி விற்கும் நிலைக்கு வந்து விடுகிறது.
பிராய்லர் கோழி உண்பதினால் ஏற்படும் பக்க விளைவுகள்:-
1.அதிகளவு மற்றும் அடிக்கடி பிராய்லர் கோழி சமைத்து உண்பதினால் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படும்.
2.பிராய்லர் கோழி அதிகளவு கெட்ட கொழுப்பு கொண்டுள்ளதால் இவற்றை உண்பதினால் உடல் எடை எளிதில் கூடி விடும்.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
3.இந்த கோழி இறைச்சியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு இரத்த அழுத்தம்,இதயம் தொடர்பான பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
4.பிராய்லர் கோழி விரைவாக வளர அவற்றிற்கு செலுத்தப்படும் இராசயனங்கள் ஆண்களுக்கு விந்தணு பாதிப்பு,மலட்டு தன்மை ஆகியவற்றை உண்டாகும்.
5.பிராய்லர் கோழியில் அதிகப்படியான இரசாயனங்கள் இருப்பதால் இவற்றை உண்ணும் பெண் பிள்ளைகள் மிகவும் சிறு வயதிலேயே பருவம் அடைந்து விடுகின்றனர்.இந்த கோழி இறைச்சி பெண்களுக்கு கருப்பை தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதினால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
ஆகவே முடிந்தளவு பிராய்லர் கோழி இறைச்சிகளை அடிக்கடி உண்பதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.குறிப்பாக வறுத்து உண்பதை அறவே நிறுத்து வேண்டும்.இவ்வளவு சாப்பிட்டு பழகி விட்டதால் உடனடியாக தவிர்ப்பது என்பது கடினம் தான்.முடிந்தளவு குறைவான அளவு எண்ணெயில் சமைத்து சாப்பிடுவது மற்றும் அடுத்த நாள் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது போன்றவற்றையாவது பாலோ செய்வதை பழகிக் கொள்ளுங்கள்.