நீங்கள் வீடு தேடும் நபரா? அப்போ இதெல்லாம் கவச்சிக்கோங்க!!

Photo of author

By Divya

நீங்கள் வீடு தேடும் நபரா? அப்போ இதெல்லாம் கவச்சிக்கோங்க!!

நம்மில் பலருக்கு வீட்டு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சில காரணங்களால் அவை நடப்பதற்கு சற்று கால தாமதம் ஆகும். அதேபோல் வாடகை வீடே கதி என்று சிலர் இருப்பர். சொந்த வீடு வைத்திருப்பாவோரோ, வாடகை வீட்டில் வசிப்பவரோ அல்லது வீட்டு கட்டும் கனவில் இருப்பவரோ. யாராக இருந்தாலும் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

வாடகை வீட்டுக்கு குடி போக அல்லது வீடு வாங்க நினைக்கும் நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:-

*வாடகை வீடு அல்லது சொந்த வீடு என்று எதுவாக இருந்தாலும் சரி தெருக்குத்து இருக்கக் கூடாது. அதாவது வீட்டிற்கு எதிரில் தெரு இருக்கக் கூடாது.

*முச்சந்தி வீடாக இருக்க கூடாது. அதாவது வீட்டிற்கு எதிரில்,வலது பக்கம், இடது பக்கம் தெருக்கள் மூன்றும் ஒன்றா சேர்ந்தவாறு இருக்கக் கூடாது.

*வீட்டிற்கு எதிரில் குட்டி சுவர் இருக்க கூடாது.

*தெரு வாசலின் உயரத்தை விட உள் வாசலின் உயரம் குறைவாக இருக்கக் கூடாது. அதாவது ஒரு படி இறங்கி உள்ளே போவதுபோல் இருக்கக் கூடாது.

*வீட்டின் முன்புறம் முருங்கை மரம் இருக்கக் கூடாது. இப்படி இருந்தால் வீட்டிற்கு குடி போனவுடன் அதிக பிரச்சனை இருக்கும்.

*எதிர் வீட்டு நிலை வாசலை நம் நிலைவாசலுக்கு நேர் எதிராக இருக்கக் கூடாது.

*முக்கியமாக தென் மேற்கு, வட கிழக்கு மூலையில் கழிவறை இருக்கக் கூடாது.

*வீட்டிற்கு முன் முள் வகை செடி, மரம் இருக்க கூடாது. இவை எதிர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொடுத்து விடும்.