ஆண்,பெண் தங்கள் பருவ காலத்தில் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.அந்தரங்க பகுதியில் முடி வளர்வது,பெண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிப்பது ஆண்களுக்கு மீசை,தாடி வளர்வது,விந்து வெளியேற்றம் போன்றவை பருவ காலத்தை எட்டி விட்டதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.அதேபோல் பருவ காலத்தில் இருந்து சுய இன்பம் செய்யும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்கிறது.
இதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் பெரும்பாலானோர் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மை.சுய இன்பம் ஒரு தவறான பழக்கம் என்ற கருத்து இருப்பதால் தான் பலரும் அதில் ஈடுபட்ட பிறகு சிலருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.இதன் காரணமாக மன அழுத்தப் பிரச்சனையை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
சில மதங்களில் சுய இன்பம் இழிவான செயல் என்று கருதப்படுகிறது.சுய இன்பம் ஒழுக்கத்திற்கு எதிரானது என்று மக்கள் மத்தியில் கருத்து இருப்பதால் இதை ஒழுக்கமற்ற செயல் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது.
அதேபோல் சுய இன்பம் செய்தால் முடி உதிர்வு,ஆண்மை குறைபாடு,மூச்சு வாங்குதல்,பாலியல் உறவில் நாட்டமின்மை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.ஆனால் உண்மையில் சுய இன்பத்தில் ஈடுபவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.
சுய இன்பத்தில் ஈடுபட்டால் உடல் புத்துணர்வு அதிகரிக்கும்.பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் அவர்களின் மன ஆரோக்கியம் அதிகரிக்கும்.முடி உதிர்வு,கண் பார்வை குறைபாடு,விந்து தரம் குறைதல் போன்ற பிரச்சனைகள் சுய இன்பம் செய்வதால் ஏற்படுவதில்லை.அது வேறு உடல் நலக் கோளாறால் ஏற்படுகிறது.
ஆண்கள் தங்களின் விந்து தரத்தை அதிகரிக்க அடிக்கடி விந்து வெளியேற்றம் செய்ய வேண்டும்.சுய இன்பம் செய்வதால் உடலுக்கு அதிக பலம் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சுய இன்பத்தில் ஈடுபவதால் உடலுறவின் மீது நாட்டம் குறையும் என்பது தவறான கருத்து.சுய இன்பம் வேறு உடலுறவு வேறு என்ற புரிதல் இருக்க வேண்டும்.
ஒருவர் விந்து வெளியேற்றாமல் இருந்தால் அவரின் டிஎன்ஏ கடுமையாக சேதப்படும்.ஆண்களுக்கு சுய இன்பம்,உடலுறவு போன்றவற்றில் ஈடுபாடு இல்லையென்றாலும் ஏதோ ஒரு சூழ்நிலையால் அவர்களுக்கு தானாகவே விந்து வெளியேறிவிடும்.சிலர் நாள் ஒன்றில் அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்.இப்படி இருந்தால் ஆண்குறி வலி மற்றும் உடல் சோர்வு அதிகமாகிவிடும்.எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ சுய இன்பத்தில் ஈடுபட்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.