நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..

0
159

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..

 

நகச்சுற்று என்பது நகக்கண்ணில் வரும் புண் அல்லது நகத்தின் வெளி ஓரமாகவோ அல்லது நகத்தைச் சுற்றியுள்ளப் பக்கங்களில் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித்தொற்று தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படுத்தும்.நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இது மிக அதிகமாக ஏற்படுகிறது.கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும்.

நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதால் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமித் தொற்றிச் சீழ் பிடிப்பதால் நகச்சுற்று ஏற்படுகிறது.சில சருமநோய்களால் ஏற்படுகிறது. பெம்பிகஸ் போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித்தொற்று ஏற்பட்டுகிறது.சமையல் வேலை தோட்ட வேலை தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக்கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக்கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் ர்யபெ யேடை என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும் போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடித்து அதனால் நகச்சுற்று ஏற்படுகிறது.பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும். பின்னர் சீழ்ப்பிடித்து வீங்க ஆரம்பிக்கும்.இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகுவீர்கள்.

 

 

Previous articleஅச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..
Next article“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?