பென்ஷன் பணம் வாங்குபவரா நீங்கள்! சைபர் கிரைம் கொடுத்த அலர்ட் மெசேஜ் !

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்சன் பணம்  வாங்குபவர்களுக்கான ஒரு முக்கிய  அறிவிப்பை சைபர் கிரைம் போலீசார் தற்போது  வெளியிட்டு  வருகின்றனர்.  அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மாதம், மாதம் அவர்களுக்கு  கிடைக்க கூடிய பென்சன் பணத்தை வைத்தே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

இவர்களது வங்கி கணக்கை குறுக்கு வழியில் முடக்கி பணத்தை திருடும் ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து  வருகிறது. இந்த சைபர்  குற்றம் செய்பவர்கள் , போலியான வங்கி அதிகாரி அடையாளத்தைப் பயன்படுத்தி  ஓய்வூதியம் பெறுபவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள், ஓய்வூதியம் தொடர்பான பணிக்கு தங்களது வங்கி ஆவணங்கள் கேட்பார்கள், மேலும்  வங்கி இணைப்பில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு OTP வந்துள்ளதாகவும், அதை சரி பார்க்க வங்கி கணக்கு எண் பற்றிய தகவல்கள் சேகரிக்க முயற்சிப்பார்கள்.

மேலும் தங்களுக்கு பிற ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பணம் வருகிறதா? என்று கேட்பார்கள்,     பிறகு  மோசடியாளர்கள்   மிகவும் அவசர நிலையில் உள்ளதாகவும், உடனடியாக வங்கி விவரங்களை கொடுக்காவிட்டால் இந்த பணத்தை பெற முடியாது என்று  ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபடுவார்கள். என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். வங்கி தொடர்பான சேவைகளுக்கு வங்கி ஊழியர்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுதியுள்ளர்கள் சைபர் கிரைம் போலீசார்.