ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 

Photo of author

By Rupa

ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 

Rupa

Are you a pensioner? There's the reduction crowd for you! Go and take Advanthajee today!
ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
தேனி மாவட்டத்தில் தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு
பணியாளர்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது
தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு
அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கங்கள்
அனைவரும் கலந்து கொள்ளும் “ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” தேனி
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர்
மற்றும் தேனி மாவட்ட கருவூல அலுவலர் அவர்கள் முன்னிலையிலும் 15.07.2022
வெள்ளிகிழமை அன்று காலை 10.00 மணியளவில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும ஓய்வூதிய
சங்கங்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை “மாவட்ட ஆட்சித்தலைவர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி ” என்ற முகவரிக்கு 06.07.2022-க்குள் அனுப்பி
வைக்குமாறும், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாளன்று தேனி
மாவட்டத்தில் கோரிக்கை நிலுவை உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும்
ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
 க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.