அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!

Photo of author

By Divya

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!

நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம்.

நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட காலமாக வங்கியில் தூங்கி கொண்டிருக்கும் நகைகளை விரைவில் மீட்டு விடலாம்.

பரிகாரம்:-

ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி அதன் மீது சிறிது மஞ்சள் தூள் தூவி விடவும். பின்னர் அதில் சிறிதளவு குங்குமம் வைத்து அதன் மீது ஒரு ரூபாய் நாணயம் வைக்கவும்.

பின்பு அதன் மீது 27 மிளகு எண்ணி போட்டு விடவும். அதற்கு ஒரு பூ வைத்து விடவும். இதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் பூஜை அறையில் வைத்து அதன் மீது ஒரு நெய் தீபம் ஏற்றி மஹா லட்சுமி தேவியை மனதார வேண்டி தூப தீபம் காட்டி வழிபடவும்.

முக்கியமாக விரைவில் நகையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விடவும். பின்பு 3-வது நாள் இதை எடுத்து அதில் உள்ள ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். அந்த உப்பையும், மிளகையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சேர்த்து கலக்கி யாருடைய காலும் படாத இடத்தில் ஊற்றி விடவும். தொடர்ந்து 9 வாரங்களுக்கு செய்துவதற்குள் நிச்சயம் நகையை மீட்க வழி பிறக்கும்.