பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம் வெளியட்ட முக்கிய அறிவிப்பு!
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து ஆன்லைனில் மூலம் சான்றிதழை பதிவிறக்கலாம். விடைத்தாள் நகலை பெற ஜூன் 30 தேதி காலை 10 மணி முதல் ஜூலை 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்தாண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொது தேர்வு எழுதிய மாணவர்களை விட மாணவிகள் 10.13% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் 95.56% முதலிடம் பிடித்துள்ளது. விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால் விடைத்தாள்களில் நகலை கோரி விண்ணப்பிக்க கூடாது.
விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். இந்நிலையில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 துணைத்தேர்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.