ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

0
83
Jackpot to score for drivers and conductors! Government of Tamil Nadu announces action!
Jackpot to score for drivers and conductors! Government of Tamil Nadu announces action!

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள். திமுகவின் வாக்குறுதி பட்டியலில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும் எனவும். அனைவருக்கும்  தூய்மையான குடிநீர் வழங்கப்படும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளராக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும் மற்றும் அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச நோட்டு உடன் கணினி வழங்கப்படும்.  மேலும் அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வசதி வழங்கப்படும்.

என  எண்ணற்ற வாக்குறுதிகளை திமுக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்றதை அடுத்து அரசு உள்ளூர் பேருந்தில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இதன்  மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்நிலையில் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள்  இலவசமாக  பயணம் செய்வதால் அந்த பஸ்களை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல் படி பெரிதளவும் பாதிப்படைந்துள்ளது.இதை  தொடர்ந்து அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல் படியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது .

போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால் முன்னிலையில் நடைபெற்ற போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தின் கூட்டத்தில் பெண்கள் கட்டணம்  இல்லாத பயணம் செய்யும் பஸ்களில் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் வசூல் படியை அதிகப்படுத்தவும்  கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையின்  படி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும்  பேருந்துகளில் பணி புரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு  வழங்கப்படும் வசூல் படியை விட இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author avatar
Parthipan K