நீங்கள் கூன் வளைந்து உட்காரும் நபரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதால் முதுகு தண்டு வடம் அதிகளவு பாதிக்கிறது.இதனால் சிறு வயதிலேயே கூன் விழுந்து விடுகிறது.உட்காரும் பொழுது முதுகு தண்டு வரம் வளையாமல் இருக்க வேண்டும்.அதற்காக 90 டிகிரி கோணத்தில் அதாவது செங்குத்தாக உட்கார வேண்டும்.
ஆனால்80% மக்களால் 2 நிமிடங்கள் கூட நேராக உட்கார முடியவில்லை.காரணம் அவர்களின் முதுகு தண்டு வடம் வளைந்து விடுவது தான்.சிறு வயதில் இருந்தே நேராக உட்கார மற்றும் நிற்க பழக வேண்டும்.
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே கூன் விழும்.ஆனால் இன்று பெரும்பாலான இளம் வயதினர் கூன் வளைதல் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
கூன் வளைந்து உட்காருவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்:-
நீண்ட நேரம் கூன் வளைந்தபடி உட்கார்ந்தால் முதுகு தண்டு வடம் வளைந்து விடும்.இதனால் முதுகு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
கூன் வளைந்து உட்கார்ந்தால் ஒற்றை தலைவலி பாதிப்பு ஏற்படும்.சிறு வயதில் கூன் வளைந்து உட்காரும் பழக்கம் இருந்தால் 30 வயதிற்கு பின்னர் அவை தீராத பிரச்சனைகளை உண்டாக்கும்.
கூன் வளைந்து உட்காரும் பழக்கம் கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கூன் வளைந்து அமர்வதால் தூக்கமின்மை ஏற்படும்.இதனால் மன அழுத்தம் அதிகமாகும்.
கூன் வளைதல் ஏற்படாமல் இருக்க வழிகள்:
தினமும் உடற்பயிற்சி,யோகா செய்ய வேண்டும்.
முதுகு தண்டு வடத்திற்கு மசாஜ் மற்றும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.நேராக படுத்து உறங்க வேண்டும்.
தினமும் 10 நிமிடம் நேராக உட்கார பயிற்சி எடுக்க வேண்டும்.