உடலில் உள்ள தேமல் சீக்கிரம் மறைய வேண்டுமா? இன்று முதல் இதை செய்யுங்கள்.. ஏழு நாட்களுக்குள் அவை மறைந்து விடும்!!

0
357
Do you want the allergy in the body to disappear quickly?
Do you want the allergy in the body to disappear quickly?

உடலில் உள்ள தேமல் சீக்கிரம் மறைய வேண்டுமா? இன்று முதல் இதை செய்யுங்கள்.. ஏழு நாட்களுக்குள் அவை மறைந்து விடும்!!

தோலில் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இன்று தேமல்.இவை தட்டையாக,வெண்மையாக காணப்படும்.இவை ஒரு தொற்று பாதிப்பு.இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற ஆரோக்கிய குறைபாட்டால் வரக் கூடிய பாதிப்பு.தேமல் வந்து விட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையில் குணமாக்கி கொள்வது நல்லது.

தேமல் மறைய வீட்டு வைத்தியம்:-

தீர்வு 01:

1)கறிவேப்பிலை
2)வெந்தயம்

ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் 5 தேக்கரண்டி வெந்தயத்தை நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடி தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமல் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 02:

1)பாசிப்பருப்பு
2)வெட்டி வேர்

100 கிராம் பாசி பருப்பை வறுத்து அற வீட்டுக் கொள்ளவும்.பின்னர் மிக்ஸி ஜாரில் பாசிப்பருப்பு மற்றும் 50 கிராம் வெட்டி வேரை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இந்த பொடி தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமல் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 03:

1)கருஞ்சீரகம்
2)எலுமிச்சை சாறு

இரண்டு கருஞ்சீரகத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துக் உடலில் இருக்கின்ற தேமல் மீது பூசி குளித்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 04:

1)நல்லெண்ணெய்
2)மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.இதை உடலில் இருக்கின்ற தேமல் மீது பூசி குளித்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 05:

1)எலுமிச்சை சாறு
2)ஆவாரம் பூ பொடி

ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ பொடியில் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து தேமல் மீது பூசி குளித்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

தீர்வு 06:

1)துளசி பொடி
2)வெற்றிலை பொடி

ஒரு தேக்கரண்டி துளசி பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி வெற்றிலை பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமல் மீது பூசி குளித்து வர அவை சில நாட்களில் மறைந்து விடும்.

தீர்வு 07:

1)குப்பைமேனி பொடி
2)மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி குப்பைமேனி பொடியில் சிறிது மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைத்து தேமல் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.