ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!

0
118

 

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களா நீங்கள்? டார்ச்சில் உள்ள மூன்று முக்கிய அம்சங்கள் இதோ!

 

இப்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஸ்மார்ட் போனில் அடங்கியுள்ளது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூழ்கி இருக்கும் சாதனம் என்றால் அது தொலைபேசி தான். ஸ்மார்ட் போனில் மேலே உள்ள செட்டிங்ஸுல் டார்ச் லைட் என அமைப்பு ஒன்று உள்ளது. இந்த டார்ச்சை ஆன் செய்து நீங்கள் ஒரு லைட்டாக மட்டுமே பயன்படுத்தி கொண்டிருப்பீர்கள்.

ஆனால் அந்த டார்ச்சர் மூன்று முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ளது. முதலாவதாக டார்ச்சை லாங் பிரஸ் செய்தால் ஒரு திரை காணப்படும். அதில் லெவல் ஒன்று முதல் லெவல் ஐந்து முதல் இருக்கும். அந்த லெவலை அதிகரித்தால் டார்ச்சின் ஒளியானது அதிகரிக்கும். அதே சமயம் லெவலை குறைத்தால் டார்ச்சின் ஒளியும் குறையும். இரண்டாவதாக போன் செட்டிங்க்கு செல்ல வேண்டும். அதற்குப் பிறகு அதில் அக்சஸ்பிலிடி என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

 

அதில் அட்வான்ஸ் செட்டிங் என்பதையும் கிளிக் செய்து கொள்ள வேண்டும். பிளாஷ் லைட் நோட்டிபிகேஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேமரா பிளாஷ் லைட் என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் போனிற்கு மெசேஜ் மற்றும் கால் வந்தால் டார்ச் ஆனது ஆன் ஆகும். மூன்றாவதாக ப்ளே ஸ்டார்ரிற்கு செல்ல வேண்டும். அதில் டார்ச் வேல்யூ என்பதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதில் டார்ச் என்பதை லாங் பிரஸ் செய்து கொள்ள வேண்டும். இப்போது புதிதாக ஒரு பக்கத்தில்  பாஸ்வேர்ட் செட்டிங் ஓபன் ஆகும். அதில் நாம் நமக்கு பிடித்த பாஸ்வேர்டை செட் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அதில் இமேஜ் ,வீடியோஸ், ஆடியோஸ், நோட்ஸ் ஷேர் போன்றவை காண்பிக்கப்படும் அதில் நாம் ஆக வைக்க வேண்டும் என்று நினைப்பதை கிளிக் செய்து ஹேக் செய்து கொள்ளலாம். மீண்டும் அந்த பைல் வேண்டுமென்றால் அதன் மேல் கிளிக் செய்து மீண்டும் அன்லாக் செய்து கொள்ளலாம். டார்ச்சில் இவ்வாறான மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளது.

author avatar
Parthipan K