நீங்கள் பொது தேர்வு எழுதும் தனித்தேர்வர்களா? நாளை முடிவடையும் இணையவழி விண்ணப்பம் உடனே முந்துங்கள்!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி போட்டி தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் தான் கொரோனா பரவல் குறைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் டூ,பிளஸ் ஒன் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பித்து அதன் பிறகு ஹால்டிக்கெட் பெற்று தேர்வு எழுதலாம்.இது குறித்து அசுத்த தேர்வுகள் இயக்கம் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் ஒன், பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறிய தகுதி வாய்ந்த தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும் வகையில் மாவட்ட வாரியாக அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையங்களில் நாளை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் மேல்நிலை வகுப்புகள் ரூ 1000 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ரூ 500 சிறப்பு கட்டணமாக செலுத்தி இணையவழியில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்க முன்னதாகவே இம்மாதம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.