சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

0
102
#image_title

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருபவர்களா இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

*சொந்த வீடு அமையாதவர்கள், நிலங்கள் கிடைக்காதவர்கள் ஒன்பது செவ்வாய் கிழமை உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம்.

*வீடு,வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரம் தானமாக கொடுக்கலாம்.

*ராம நாமத்தை செங்கலில் எழுதி ஆலயம் அமைக்கும் பணிகளுக்கு கொடுக்கலாம்.

*இருக்கும் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை நிலை வாசலுக்கு கீழ் பக்கம் இருக்கும் சட்டத்தில் இரண்டு பக்கமும் மஞ்சள் பூசி குங்குமம் வைக்கவும்.பின்னர் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி தூபம் காட்டி நிலை வாசலுக்கு பூஜை செய்து வரலாம்.

*பூஜை அறையில் உள்ள விளக்கை பூவால் அலங்கரித்து கொள்ளவும்.பின்னர் விளக்கிற்கு பூ சுற்றி,மஞ்சள் குங்குமம் இட்டு கொள்ளவும்.பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து எண்ணெயில் போடவும்.அதன் பின் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து விளக்கிற்கு கீழ் வைக்க வேண்டும்.அதாவது விளக்கின் அடிபக்கத்தில் வைக்க வேண்டும்.சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இதை செய்ய வேண்டும்.சொந்த வீடு இருப்பவர்கள் மேலும் ஒரு வீடுகட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை விளக்கேற்ற இருக்கும் அந்த எண்ணெயில் போட வேண்டும்.இவ்வாறு செய்து விளக்கேற்றினால் விரைவில் சொந்த வீடும் அமையும்.

*வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர பாகவனை வழிபட்டு வருவதால் வீடு கட்டும் முயற்சி சிறப்பாக இருக்கும்.வெள்ளை நிற வஸ்திரம் வாங்கி சுக்கிரபாகவனுக்கு சாற்றவேண்டும். இதனால் கோடி நன்மைகள் உண்டாகும்.

Previous articleகேரள மக்களின் பேவரைட் “அவியல்” – சுவையாக செய்வது எப்படி?
Next articleஇவ்வாறு செய்தால் இஞ்சி பூண்டு விழுது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!