நீங்கள் சாப்பிடுவது ஒரிஜினல் பேரீச்சையா? இந்த பிராண்ட் பேரீ ச்சையை மட்டும் சாப்பிடாதீங்க!!

Photo of author

By Divya

நீங்கள் சாப்பிடுவது ஒரிஜினல் பேரீச்சையா? இந்த பிராண்ட் பேரீ ச்சையை மட்டும் சாப்பிடாதீங்க!!

Divya

வெப்பமண்டல பகுதிகளில் வளரும் உலர் வகை பழங்களான பேரிச்சை உலகில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பேரீச்சம் பழம் ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உலர் விதையாகும்.தினமும் ஒரு பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

பேரீச்சம் பழத்தில் நிறைந்திருக்கின்ற பொட்டாசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பேரீச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)செலினியம்
2)பொட்டாசியம்
3)மாங்கனீசு
4)மெக்னீசியம்
5)இரும்பு
6)வைட்டமின்கள்

பேரீச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:

1.மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.

2.உடல் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

3.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.மூட்டு வலி பாதிப்பை சரி செய்கிறது.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

4.இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம் பழத்தை உட்கொள்ளலாம்.

5.இதில் இருக்கின்ற மெக்னீசியம் சத்துக்கள் தசை வீக்கத்தை குறைக்க உதவுகிறது.தொடர்ந்து பேரீச்சை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

6.தினமும் நான்கு பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்.இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட வேண்டும்.இத்தனை நன்மைகள் கொண்டிருக்கும் பேரீச்சம் பழத்தில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

பெரும்பாலும் பிராண்ட் பேரிச்சம் பழம் நம்பகத் தன்மை நிறைந்தவை என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.ஆனால் உண்மையில் பிராண்ட் என்ற பெயரில் மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடி வருகின்றனர்.

விலை மலிவு மற்றும் விலை குறைவான பேரிச்சம் பழங்கள் தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது.இதில் அரேபியா,ஈரான்,ஈராக்,ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பலவகை பேரிச்சம் பழங்கள் இந்தியாவில் இறக்குமதி ஆகிவருகிறது.இதில் லைன் டேட்ஸ் என்பது பிரபலமான பேரீச்சையாக திகழ்கிறது.

ஆனால் இவை தரமற்ற மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பேரீச்சையாக திகழ்கிறது.இதேபோல் பல தரமற்ற பேரீச்சைகள் இருக்கிறது.பேரீச்சையை அதன் உண்மை தரத்தை அறிந்தே வாங்க வேண்டும்.