உங்களுக்கு பல் வலி அதிகரிக்குதா? இது உயிரை பறிக்கும் இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

0
4

சிலருக்கு பல் சொத்தை,பல் ஈறு வீக்கம்,வயது முதுமை,பற்களில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் பல் வலி கடுமையாக இருக்கும்.ஏதேனும் பல் வலிக்க ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் அவை சாதாரண பிரச்சனை தான்.

ஆனால் காரணமே இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி பல் வலித்தால் அலட்சியமாக கருதிவிடாதீர்கள்.இது இதயம் சம்மந்தபட்ட பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த காலத்தில் பல் பிரச்சனையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.

மார்பு வலி வந்தால் மாரடைப்பு ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு அறிகுறி.அதேபோல் மார்பு வலி இருந்தால் இடது மற்றும் வலது கைகளில் அதிக வலி ஏற்படும்.அதேபோல் முதுகு பகுதியில் பிடிப்பு,இறுக்கம்,வலி போன்றவை இருந்தால் அவை மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம்.

நெஞ்சு வலி பாதித்தவர்கள் தங்கள் முதுகு பகுதியில் வலி அனுபவிப்பதோடு பல் வலியையும் சேர்த்து அனுபவிக்கின்றனர் என்று ,மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மாரடைப்பிற்கும் பல் வலிக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.

நமது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலோ அல்லது குறைவான அளவு இரத்தம் சென்றாலோ பல்,முதுகு,கை போன்ற பகுதியில் வலி மற்றும் அசௌகரிய உணர்வு ஏற்படும்.உங்களுக்கு அடிக்கடி காரணம் இன்றி வலி ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

இது தவிர மாரடைப்பிற்கு வயிற்று வலி,அதிக வியர்வை வெளியேறுதல்,படபடப்பு,மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல் போன்றவையும் அசாதாரண அறிகுறியாக இருக்கின்றன.இனி உடலில் ஏதேனும் மாற்றம் மற்றும் அசௌகரிய உணர்வு ஏற்பட்டால் உடனடியாக மருதுவரை அணுகி தீர்வு காண்பது நல்லது.

Previous articleமாய்ஸ்சரைசர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதீங்க!!
Next articleHEALTH TIPS: உங்கள் ஆயுள் காலத்தில் 9 வருடங்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமா? அப்போ இந்த விளையாட்டை விளையாடுங்கள்!!