வீட்டுக்கு அரிசி வாங்கப் போகிறீர்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்கள்!!
ஒவ்வொரு மாதமும் அரிசி வாங்கும் போது திங்கட் கிழமை அன்று வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது அரிசியை கடனுக்கு வாங்கக் கூடாது.
அதேபோல் எப்பொழுது அரிசி வாங்குவதாக இருந்தாலும் திங்கட் கிழமை நாள் பார்த்து தான் வாங்க வேண்டும். அக்கவுன்ட்டில் மற்ற மளிகை சாமான்கள் வாங்கினாலும் அரிசிக்கு மட்டும் முடிந்தால் காசு கொடுத்து விடவும்.
அப்படி முடியாதவர்கள் 3 கிலோ அரிசிக்கு மட்டும் முதலில் காசு கொடுத்து வாங்கிய பின் அரிசி மூட்டையை கணக்கில் வாங்கிக் கொள்ளவும்.
வாங்கி வந்த அரிசியில் ஒரு டம்ளர் (கண்ணாடி அல்லது பீங்கான்) எடுத்து அதன் மீது ஒரு ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம் வைத்து பூஜை அறையில் வைத்து விடவும்.
அடுத்த மாதம் புது அரிசி வாங்கும் போது இதை மாற்றி வாயில்லா ஜீவன்களான பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் உணவாக வைக்கவும்.
அது மட்டும் அல்லாமல், அரிசி அளந்து போடும் – படி – அழாக்கு /உழக்கு – இதைக் கவிழ்த்தி அல்லது சாய்த்து போடக் கூடாது. பாத்திரத்தை விட்டு வெளியே தனியே வைக்கவும் கூடாது.
அரிசியை அளந்து எடுத்த பிறகு அதை நிரப்பி அரிசி பாத்திரத்திற்குள் நிற்க வைத்து மூட வேண்டும். இது தான் ஐதீகம். இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் அரிசி தட்டுப்பாடு நீங்கும்.