தர்பூசணி வாங்க போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கிட்டு போய் வாங்குங்க!!

Photo of author

By Divya

தர்பூசணி வாங்க போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கிட்டு போய் வாங்குங்க!!

கோடை காலத்தில் அதிகளவு விற்பனை செய்யக் கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று.இவற்றின் தோல் பச்சை நிறத்திலும் சதை பற்று இனிப்பு சுவையுடன் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.தர்பூசணி அதிக நீர்ச்சத்து நிறைந்த பழமாகும்.இதை கோடை காலத்தில் சாப்பிடுவதால் தொண்டைக்கு இதமாக இருப்பதோடு உடல் சூடு உடனடியாக நீங்கும்.

தர்பூசணியில் அதிகளவு வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது.இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு சரும பிரச்சனையை முழுமையாக போக்குகிறது.இப்படி பல நன்மைகளை வாரி வழங்கும் தர்பூசணியில் மருந்து செலுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.அதேபோல் செயற்கை இனிப்பு அதிகளவில் கலக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தரும் செய்திகள் அவ்வப்போது கேள்விப்படும் ஒன்றாக இருக்கிறது.

இதனால் ஆரோக்கியமான தர்பூசணியை எவ்வாறு தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

தர்பூசணியில் ஆண் மற்றும் பெண் என்று இரு வகைகள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிய வாய்பில்லை.உருண்டை வடிவில் வட்டமாக இருந்தால் அவை பெண் தர்பூசணி.நீள்வட்ட வடிவில் இருந்தால் அவை ஆண் தர்பூசணி ஆகும்.

நீள்வட்ட தர்பூசணியை விட வட்ட வடிவில் அதாவது உருண்டை வடிவில் உள்ள தர்பூசணி சாப்பிட சுவையாக இருக்கும்.

அதேபோல் தர்பூசணியை தட்டி பார்த்து வாங்க வேண்டும்.தட்டும் பொழுது சத்தம் கேட்டால் அவை அதிக சுவை கொண்டது என்று அர்த்தம்.ஆனால் சத்தம் கேட்கவில்லை என்றால் அவை சுவையற்ற தர்பூசணி என்று அர்த்தம்.

தர்பூசணியில் கோடுகள் இருந்தால் வாங்கக் கூடாது.இவை வைரஸ் தொற்று பாதித்ததை குறிக்கிறது.அதேபோல் அதிக வாசனை நிறைந்த தர்பூசணி பழத்தை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.இவை தர்பூசணி அழுகி இருப்பதை உணர்த்துகிறது.

தர்ப்பூசணியை சுற்றி மஞ்சள் நிறத்தில் இருந்தலோ,காம்புகள் காய்ந்து இருந்தாலோ அதை கண்டிப்பாக வாங்கலாம்.இவை தர்பூசணி அதிக சுவையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.