ஹோட்டல் வைக்கப் போறீங்களா.. அப்போ மத்திய அரசு தர ரூ.50,000 உங்களுக்கு தான்!! மிஸ் பண்ணிராம உடனே அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

ஹோட்டல் வைக்கப் போறீங்களா.. அப்போ மத்திய அரசு தர ரூ.50,000 உங்களுக்கு தான்!! மிஸ் பண்ணிராம உடனே அப்ளை பண்ணுங்க!!

Gayathri

Are you going to open a hotel? Then the central government will give you Rs. 50,000!! Don't miss it, apply immediately!!

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவுல இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சுய தொழிலை தொடங்குவதற்கும் அவர்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கும் சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது.

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் மட்டுமல்லாது பெண்களினுடைய வாழ்வை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் சுயமாகவே தங்களுக்கு அறிந்த கலையான சமையல் கலை மூலம் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வழிவகையை திட்டம் உருவாக்கி இருக்கிறது.

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா :-

✓ இத்திட்டத்தில் பயன்பெற நினைக்கும் பெண்கள் 18 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும்.

✓ பெண் தொழில் முனைவோர்களை ஆதரிக்கும் விதமாக இடத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரை கடந்ததவி வழங்கப்பட்டு வருகிறது.

✓ 50,000 ரூபாய் பணத்தினை பயன்படுத்தி சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், சமையல் கருவிகள், குளிர்சாதனப்பெட்டி, உணவுப் பொருட்கள், உணவு மேஜை போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

✓ இந்த திட்டத்தில் பயனடைய நினைப்பவர்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ இதற்கு முன் கடன் பெற்றவராக இருந்தால் அந்த கடனை சரிவர திருப்பி செலுத்தி வராக இருத்தல் வேண்டும். அதேபோன்று நல்ல சிபில் ஸ்கோர் இருப்பது அவசியம்.

✓ ஏற்கனவே நடத்தப்படக்கூடிய பதிலாக இருந்தால் அது தனியாகவோ அல்லது கூட்டு துணையாகவும் இருந்தால் கட்டாயமாக 1 வருடம் வரை கடையை நடத்தி இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நினைக்கும் சுய தொழில் செய்ய முன்வரும் பெண்கள் அருகில் இருக்கக்கூடிய SBI வங்கி கிளைகளை நேரில் சென்று இத்திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.