Breaking News, District News, Madurai, Religion, State

பழனி செல்ல போறீங்களா?? அங்கு தற்போது இந்த சேவை நிறுத்தம்!!

Photo of author

By Amutha

பழனி செல்ல போறீங்களா?? அங்கு தற்போது இந்த சேவை நிறுத்தம்!! 

பழனி மலையில் தற்காலிகமாக ரோப் கார் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். மூன்றாம் படை வீடான இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் பழனி மலையில் பக்தர்கள் செல்வதற்கு என்று யானைப்படி,  மற்றும் படிப்பாதை முக்கியமான வழிகளாக உள்ளன.

மேலும் குழந்தைகள், நடக்க இயலாதவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் ஆகியவர்களுக்காக ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விரைவாகவும் பழனி மலையில் அழகை ரசிக்கப்படியே பயணம் மேற்கொள்ளலாம் என்பதாலும் பல பக்தர்களின் முதல் தேர்வாக ரோப் கார் சேவை உள்ளது.

இந்த சூழ்நிலையில் மலைக்கோவிலில் தற்போது காற்றின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக ரோப் கார் சேவையானது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. காற்றின் போக்கு சரியாகும் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய யானை பாதை, மற்றும் படிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் காற்றின் வேகம் சரியானதும் ரோப் கார் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!! சூப்பர் ஸ்டாரின் அனல் பறக்கும் பேச்சு!!