ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!! சூப்பர் ஸ்டாரின் அனல் பறக்கும் பேச்சு!!

0
31
Jailer Music Release!! Superstar's fiery speech!!
Jailer Music Release!! Superstar's fiery speech!!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!! சூப்பர் ஸ்டாரின் அனல் பறக்கும் பேச்சு!!

நெல்சன் இயக்கத்தில் அடுத்த மாதம் பத்தாம் தேதி திரைக்கு வரவிருக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு  விழா நடைபெற்றது. இதில், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி சேராப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவானது நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, அண்ணாத்த படத்திற்கு பிறகு நிறைய இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்ல வந்தார்கள்.

ஆனால் அவர் அனைத்தும் பாட்ஷா அண்ணாமலை போல் இருந்ததால் நிராகரித்து விட்டேன். அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. ஒரு படத்திற்கு அப்பா தயாரிப்பாளார் என்றால் அதற்கு அம்மா இயக்குனர் தான்.

நெல்சனை நான் பத்து மணிக்கு கதை கூற வர சொல்லியிருந்தேன். ஆனால் அவர் வந்தது பன்னிரெண்டு மணிக்கு, வந்ததுமே ஒரு நல்ல காப்பி குடுங்க என்று கேட்டார்.

நெல்சன் முதலில் இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே பபீஸ்ட் படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டார்.

காவாலா பாடலில் எனக்கு அதிக நடன வாய்ப்பை தருவதாக கூறி விட்டு இரண்டே ஸ்டெப்ஸ் மட்டும் கொடுத்து முடிந்து விட்டார்கள். தமிழ் சினமாவில் போட்டியோ பொறாமைக்கோ இடமே கிடையாது.

நல்ல படங்கள் வந்தால் அதை வெற்றி அடைய செய்ய வேண்டும். கன்னட உலகமானது கேஜிஎப் மற்றும் காந்தாரா படங்களின் மூலம் வேறு பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

அதைப்போல தெலுங்கு திரைப்படங்களும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் புஷ்பா போன்ற படங்களால் ஒரு பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே காட்டில் இருக்கின்ற பெரிய மிருகங்களை சிறிய மிருகங்கள் வம்பு இழுத்துக் கொண்டே இருக்கும்.

அந்த நேரத்தில் நாம் அமைதியாக இருப்பது தான் சிறந்தது. உலகின் உன்னதமான மொழி மௌனம் மட்டும்தான். மேலும், குடிபழக்கம் என்னிடமா இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னும் உயரத்தில் இருந்திருப்பேன்.

குடிபழக்கத்தால் குடும்பம் கெடுகிறது. எனவே, தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள். படத்தில் இடம் பெற்றிருக்க கூடிய ஹூக்கும் பாடலில் சூப்பர் ஸ்டார் எனபதை நான் நீக்க சொன்னேன்.

கடந்த 1977  யில் இருந்து இந்த பிரச்சனை உள்ளது. ஒரு படத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று பெயர் சூட்டினார்கள். அதை வேண்டாம் என்று நான் கூறினேன்.

அதற்கு காரணம், அப்போது திரையுலகில் கமழும், சிவாஜியும் பெரிய நடிகராக இருந்தார்கள். ஆனால் நான் பயந்து கூறியதாக அனைவரும் பேசினார்கள்.

நாம் பயப்படுவது இருவருக்கு மட்டும்தான் ஒன்று கடவுள் மற்றொன்று நல்லவர்கள் என்று இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

author avatar
CineDesk