பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

0
172
Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!
Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள்.

மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். இந்த தகவலை ஜமுனா தனது கணவர் மோகனிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து ஜமுனா பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஹேமாவதியிடம் 63 லட்சத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் 63 லட்சத்தில் பாதி பணத்தை மட்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்து விட்டு மீதியை ஹேமாவும்  அவர் கணவரும் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இதனை பற்றிய ஜமுனா கேட்ட போது அவர்கள் இருவரும் தற்போது பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள். இதனையடுத்து ஜமுனாவிற்கு சந்தேகம் ஏற்பட்டு திருப்பத்தூர் மாவட்டம்  பொருளாதார  குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார்  அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மோசடியில் ஈடுப்பட்ட தம்பதிகளை கைது செய்துள்ளது. மேலும் போலீஸ் இது போன்ற பங்கு  சந்தை முதலீடு செய்து தருவதாக யாராவது சொன்னால் அதனை குறித்து புகார் அளிக்குமாறு திருப்பத்தூர் காவல்துறை அறிவித்துள்ளது.

Previous articleடைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டனும் தற்போது இல்லை!!110 ஆண்டுகளை கடந்தும்  தொடரும் துரதிர்ஷ்டம்  !! 
Next articleஇளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!!