நீங்கள் தோப்புக்கரணம் போடுவீங்களா? இதை ஜஸ்ட் 5 மினிட்ஸ் செய்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

நீங்கள் தோப்புக்கரணம் போடுவீங்களா? இதை ஜஸ்ட் 5 மினிட்ஸ் செய்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தோப்புக்கரணம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது பள்ளிக் கூடம் தான்.நாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆசிரியர் நம்மை தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள்.அதேபோல் விநாயகர் கோயிலுக்கு சென்று தோப்புக்கரணம் போட்டு கடவுளை வணங்கும் பழக்கமும் நம்மிடம் தொடர்ந்து வருகிறது.

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றி வரும் தோப்புக்கரணம் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று உங்களில் எத்தனை பேர் அறிந்திருப்பீர்.உடற்பயிற்சிக்கு எல்லாம் முன்னோடி இந்த தோப்புக்கரணம் என்று நம் மூதாதையர் நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர்.நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதை காட்டிலும் தினமும் 10 நிமிடங்களுக்கு தோப்புக்கரணம் போட்டு வந்தீர்கள் என்றாலே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தோப்புக்கரணம் போடுவதன் நன்மைகள்:

1)தினமும் 10 நிமிடங்கள் தோப்புக்கரணம் போடும் பழக்கம் இருந்தால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.மூளை சுறுசுறுப்படைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

2)தோப்புக்கரணம் செய்வதால் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.உடல் புத்துணர்வு பெற்று மனசோர்வு விலகும்.

3)தினமும் தோப்புக்கரணம் போடும் பெண்களுக்கு அவர்கள் பிரசவம் எளிதாக அமையும்.

4)உங்கள் கை,கால் வலிமையாக இருக்க தினமும் 10 நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

5)உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இயங்க தோப்புக்கரணம் உதவுகிறது.