தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்கள் அலுவலகத்திலும் பத்திரப்பதிவானது சுப முகூர்த்த நாட்களில் மட்டும் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்களின் வசதிக்கேற்ப சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே அதிக டோக்கன்கள் வழங்கப்பட்ட பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் நாளை மார்ச் 17ஆம் தேதி தமிழ் மாதத்தில் பங்குனி மாதம் துவங்கி முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு டோக்கன்களை வழங்க சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பொதுவாகவே தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் நிலங்கள் வீடுகள் போன்றவற்றிற்கான பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் நன்மை பயக்கும் என்றும் மேலும் மேலும் வீட்டிற்கு சொத்துக்கள் வந்து சேரும் என்று நம்பிக்கையுடன் மக்கள் சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவு பத்திரப்பதிவுகளை செய்வதால் அவர்களின் வசதிக்கேற்ப தமிழக அரசு சில முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறது.
பொதுவாக மாலை 6 மணிக்கு மேல் பணிபுரியக்கூடிய ஒரே அரச அலுவலகமாக சார்பதிவாளர் அலுவலகம் திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாளை மார்ச் 17 அன்று ஒரே ஒரு சார் பதிவாளர் இருக்கக்கூடிய அலுவலகத்தில் சாதாரண நாட்களில் 100 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் நாளை 150 டோக்கன்களும் , அதிக அளவு பத்திர பதிவு நடக்கக்கூடிய இடம் என்றால் 180 டோக்கன்களும் , இரண்டு சார்பதிவாளர்கள் பணிபுரிய அலுவலகங்களில் சாதாரண நாட்களில் 200 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் நாளை மட்டும் 300 டோக்கன்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.