புளி ரசம் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது!!

Photo of author

By Gayathri

அசைவ உணவுகள் சாப்பிட்ட பிறகு சீக்கிரம் செரிமானமாக புளி ரசம் குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.சிலருக்கு புளி ரசம் தினசரி உணவாக உள்ளது.நம் வீட்டு விசேஷங்களின் உணவுப் பட்டியலில் நிச்சயம் ரசம் இடம் பெற்றிருக்கும்.

செரிமானப் பிரச்சனைக்கு தீர்வாக உள்ள ரசம்,சளி,இருமல் போன்றவற்றை குணமாக்கும் மருந்தாக திகழ்கிறது.தூதுவளை இலை ரசம் ஜலதோஷத்தை போக்க உதவுகிறது.கொள்ளு ரசம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

அதேபோல் புளி ரசம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் மற்றும் வயிறுக்கோளாறு இருப்பவர்கள் புளி ரசம் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

புளி,பெருங்காயம்,சீரகம்,பூண்டு,கருப்பு மிளகு,மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து செய்யப்படும் ரசம் சிறந்த மருந்தாக திகழ்கிறது.புளியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாக உள்ளது.பூண்டு,மிளகு செரிமானக் கோளாறு மற்றும் வாயுத்தொல்லையை போக்குகிறது.கருப்பு மிளகு உடலில் வியர்வை உற்பத்திக்கு வழிவகை செய்கிறது.உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க புளி ரசம் செய்து பருகலாம்.

மஞ்சள் தூள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.மிளகு,சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.பெருங்காயம் வாயுத் தொல்லைக்கு தீர்வாக திகழ்கிறது.புளி ரசம் குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி முழுமையாக கட்டுப்படும்.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்.சிறுநீர் கடுப்பு,வயிறு கடுப்பு உள்ளவர்கள் ரசம் செய்து சாப்பிட்டு பலனடையலாம்.