குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் விரும்பி உட்கொள்ளும் வேர்க்கடலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.வேர்க்கடலையை பச்சையாகவோ,அவித்து அல்லது வறுத்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் உள்ளது.வேர்க்கடலையில் எண்ணெய்,மிட்டாய்,வேர்க்கடலை வெண்ணெய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.வேர்க்கடலையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.சுவை மிகுந்த வேர்க்கடலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
வேர்க்கடலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:-
1)புரதச்சத்து
2)நார்ச்சத்து
3)பொட்டாசியம்
4)துத்தநாகம்
5)மெக்னீசியம்
6)கால்சியம்
7)பாஸ்பரஸ்
8)வைட்டமின் பி
9)வைட்டமின் ஈ
10)நீர்ச்சத்து
11)கொழுப்பு
12)கார்போஹைட்ரேட்
13)இரும்புச்சத்து
14)நார்ச்சத்து
வேர்க்கடலை நன்மைகள்:
குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு வேர்க்கடலை பெரிதும் உதவியாக இருக்கிறது.வேர்க்கடலையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு வலிமைக்கு உதவுகிறது.
மூளையின் செயல்திறனை மேம்படுத்தவும்,சுறுசுறுப்புடன் செயல்படவும் வேர்க்கடலை சாப்பிடலாம்.குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க வேர்க்கடலையை பொடித்து பாலில் கலந்து கொடுக்கலாம்.
ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்.பித்தப்பை கல் பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலையை உட்கொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
பாதாம் பருப்பு,வால்நட் போன்ற விலை உயர்ந்த பருப்பை விட வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.வேர்க்கடலையில் உள்ள நியாசின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
வேர்க்கடலையில் உள்ள துத்தநாகம் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு வேர்க்கடலையை தொழுப்பியுடன் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.இது உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.நிலக்கடலையை தோலுடன் சாப்பிட்டால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும்.
வேர்க்கடலையை தோலுடன் சாப்பிட்டால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடும் பண்புகள் கிடைக்கும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தோலுடன் வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலை தோலில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.தோலுடன் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு குறையும்.
வேர்க்கடலையை வேகவைத்து தோலுடன் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.தோலுடன் வேர்க்கடலை சாப்பிடுவதால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்பில் இருந்து தப்பலாம்.
கடுமையான அஜீரணக் கோளாறு இருப்பவர்கள்,தோல் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலை தோல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.