நாம் நம்முடைய வயதிற்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுகின்றோமோ அந்த அளவிற்கு இளமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருப்போம்.
ஆண்,பெண் அனைவரும் தங்கள் 30 வயதிற்கு பிறகு உணவுப்பழக்க வழக்கத்தில் அக்கறை மற்றும் கவனத்தை செலுத்த வேண்டும்.வயதாகும் பொழுது நமது உடலில் ஆற்றல் குறையத் தொடங்கும்.
இதனால் உடல் சோர்வு,உடல் பலவீனம்,எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.நீங்கள் நன்றாக சாப்பிடாவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.நீங்கள் 30 வயதை கடந்தவர் என்றால் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
30 வயதை கடந்தவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
**எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து நிறைந்த காய்கறிகள்,பழங்கள் மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் .
**தயிர்,பால் போன்வற்றில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பச்சை காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.இரத்தம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
**அசைவப் பிரியர்கள் மாத்தி,சால்மன் போன்ற மீன்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.சைவப் பிரியர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதனால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்துவிடலாம்.
**ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.காபி தேநீரை தவிர்த்துவிட்டு மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பானங்களை பருகலாம்.பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் இரத்த அழுத்த அபாயத்தில் இருந்து காக்கும்.
**உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.ஜங்க் புட்,பதப்படுத்தபட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
**அதிக சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்த உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.