மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை!
இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக சட்டப்பேரவை கூட்டமானது மக்கள் முன்னிலையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பல கட்சிகளும் வரவேற்றனர். அவ்வாறு நடைபெற்ற பேரவையில் மு க ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி போட வைத்த தமிழ் மகன் என்று அவரையே கூறியுள்ளார். அதனை தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சொந்த நாட்டிலேயே தரமான தடுப்பூசி தயாரித்து நம் நாட்டிற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அன்னிய செலவாணியை இழப்பீடு இல்லாமல் காப்பாற்றி, நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்புசி போட வைத்து மத்திய அரசின் பிரதமர் மோடி அவர்களை பாராட்டுவதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமில்லை. அதற்கு மாறாக தடுப்பூசி போட வைத்த தமிழ்மகனே என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்வது நகைப்பிற்கு இடமானது என இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அவர்களை விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி நேற்று பிரதமர் மோடி அவர்கள் பஞ்ச பயணம் மேற்கொண்டு 42,750 கோடி மதிப்பில் திட்டங்களை தொடங்க இருந்தார்.
பிரதமர் செல்லும் வழியில் மோடி செல்லவிடாமல் மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிக் கொண்டார். அந்த அடிக்கல் நாட்டும் திட்டத்திற்கு செல்லமுடியாமல் மோடி அவர்கள் மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றார். இதனைக் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது என்னவென்றால், ஜனநாயகத்துக்கு புறம்பாக இறையாண்மைக்கு எதிராக அரசின் தூண்டுதலால் நம் நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை பஞ்சாப் மாநிலத்தில் நல்ல திட்டத்தை தொடங்கு சென்றபோது தடுக்கப்பட்டுள்ளார். இது வரலாறு மன்னிக்காது என்று கூறியுள்ளார்.