பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
156
Bus bookings stop! Important information released by the government!
Bus bookings stop! Important information released by the government!

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தொற்று பாதிப்பானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது முடிந்த இரண்டாம் அலையின்போது மக்களின் உயிரை அதிகளவு இழக்க நேரிட்டது. அதனையெல்லாம் இம்முறை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் தொற்று பரவல் குறையாமல் பரவிவருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது டெல்டா பிளஸ் விட 50 மடங்கு அதி விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது.

அதனால் இந்தியா முழுவதும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசு நேற்று ஊரடங்கு அமல் படுத்தி உத்தரவிட்டது. ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊராடங்கையும் அமல்படுத்தியுள்ளது. மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே செல்லும் படி அனுமதித்துள்ளனர். அதனையடுத்து வரும் நாட்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தற்போதிருந்தே பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்வது வழக்கம்.

தற்பொழுது அரசாங்கம் பல கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை போட்டுள்ளது. அந்த வரிசையில் ஜனவரி 16ஆம் தேதிக்காண டிக்கெட் முன்பதிவு செய்வதை தற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வெளியூருக்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவுப் பேருந்தில் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு விரைவுப் பேருந்து முன்பதிவானது மீண்டும் எப்போது தொடங்கும் என்பதை குறித்து எந்தவித அறிவிப்பையும் தற்போதுவரை வெளியிடவில்லை.

அது மட்டுமின்றி சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது வெளியூரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசாங்கம் சிறப்பு பேருந்துகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால் இம்முறை 16ஆம் தேதி காண அரசு விரைவு பேருந்து செல்ல டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு செய்வதே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் பொழுது சிறப்பு பேருந்து அமல்படுத்தும் என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.