திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
நம் நாட்டில் பல பேருக்கு பல வகைகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது ஹரியானா மாநில அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இதுவரை நிலுவையில் இல்லாத ஒரு புதிய அறிவிப்பாக 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளது.
இது தொடர்பாக ஹரியானா அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆண்டு வருமானமாக ரூபாய் 1.80 லட்சம் வாங்குபவர்களுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது ஹரியானா மாநிலத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததற்கு முக்கிய காரணம், அறுபது வயதான திருமணம் ஆகாத பெண் ஒருவர் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்த பெண் இவ்வாறு விண்ணப்பித்த ஒரே மாதத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இவ்வாறு வந்த இந்த புதிய அறிவிப்பால் ஹரியானா மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.