தினமும் குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை!!

Photo of author

By Divya

தினமும் குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை!!

நவீன காலத்தில் அனைத்தும் எளிதாகி விட்டது.இதனால் மனிதர்கள் உடல் உழைப்பின்றி சோம்பேறிகளாக மாறிவிட்டினர்.நம் அம்மா,பாட்டி காலத்தில் அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து,பின்னர் உலை வைத்து சாதம் செய்து சாப்பிட்டு வந்தனர்.அனால் இன்று ஆண்,பெண் என்று அனைவரும் வெளியில் வேலைக்கு செல்வதால் சமையல் செய்ய கூட நேரமின்றி சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவதை விடுத்து விரைவில் தயராகும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு உடலை கெடுத்து கொள்கிறோம்.இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாமையே.

நேரமும் மீதியாகும்,அதே வேலை எளிதாகவும் சமைத்து விட முடியும் என்பதினால் பலர் குக்கரில் சமைக்க தொடங்கி விட்டனர்.இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து நம் யாரும் கண்டு கொள்வதில்லை.குக்கரில் அரிசி,உருளைக்கிழங்கு போன்ற மாவு சத்து மிக்க பொருட்களை சமைத்து உண்டு வந்தால் உடல் சார்ந்த நோய்கள்,குறிப்பாக புற்றுநோய் ஏற்படும் என்பது நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும்? இந்த குக்கர் அவரச பயன்பாட்டிற்கு எப்பவாவது ஒரு பயன்படுத்தலாமே தவிர அடிக்கடி பயன்படுத்துவது நம்மை நோய் பாதிப்பிற்கு தள்ளி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குக்கரில் சமைத்து உண்பதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்:-

*அரிசியில் அதிகளவு ஸ்டார்ச் இருக்கிறது.இதனை பாத்திரத்தில் அதிகளவு தண்ணீர் வைத்து சமைப்பதினால் மட்டுமே நீக்க முடியும்.இந்த ஸ்டார்ச் வடிக்கும் கஞ்சி மூலம் வெளியேறி விடும் இதனால் சாதத்தில் நார்ச்சத்துகள் மட்டுமே காணப்படுவதால் அவை உடலுக்கு நன்மையை கொடுக்கும்.ஆனால் குக்கரில் இதனை சமைக்கும் போது ஸ்டார்ச் வெளியேறாமல் சாதத்தில் தங்கி விடுகிறது.இதனை உண்ணும் பொழுது நமக்கு உடல் பருமன் ஏற்பட்டு பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம்.

*பானை அல்லது பாத்திரத்தில் சாதம் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
ஆனால் குக்கரில் சமைத்த உணவுகளை உண்ணும் பொழுது சிறு வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உருவாகிறது.

* அதேபோல் மாவு சத்து கொண்ட உருளைக் கிழங்கை வேகவைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்தி வருகிறோம்.காரணம் எளிதில் வெந்து விடும்.ஆனால் இவ்வாறு செய்து சாப்பிடுவதால் புற்றுநோய்,நரம்பியல் கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் உடல் நலத்தை எளிதில் கெடுத்து விடும்.

குக்கரில் சமைக்கவே கூடாது என்று சொல்லவில்லை.எப்பொழுதாவது நேரம் இல்லாத சமயத்தில் அல்லது பிரியாணி செய்வதற்கு மட்டும் இதை பயன்படுத்துங்கள்.அதுதான் நமக்கும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் நல்லது.