வயிற்று வலியால் புழு போல் துடிக்கிறீங்களா? அப்போ தேனை இந்த மாதிரி பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

Photo of author

By Divya

வயிற்று வலியால் புழு போல் துடிக்கிறீங்களா? அப்போ தேனை இந்த மாதிரி பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

Divya

ஆரோக்கியம் இல்லாத உணவு,செரிமானமாகாத உணவு மற்றும் உடல் நலப் பிரச்சனையால் வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள நீங்கள் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

இஞ்சி – ஒரு துண்டு
தேன் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த இஞ்சி துண்டை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு இஞ்சி துண்டை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இஞ்சி பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இந்த இஞ்சி பானத்தை வடித்து ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பருகினால் வயிற்று வலி குணமாகும்.

தீர்வு 02:

குப்பைமேனி வேர் பொடி – 10 கிராம்
தேன் – கால் தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் குப்பைமேனி வேர் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி தேன் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இதை சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

நீரவ் 03:

பால் – ஒரு கிளாஸ்
தேன் – ஒரு தேக்கரண்டி

ஒரு கிளாஸ் பாலை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.