பொடுகு தொல்லையால் அவதி படுகிறீர்களா? அப்போ இந்த 8 வழிகள் உங்களுக்கு தான்!

0
127
#image_title

பொடுகு தொல்லையால் அவதி படுகிறீர்களா? அப்போ இந்த 8 வழிகள் உங்களுக்கு தான்!

நவீன கால வாழ்க்கை முறையில் தலை முடி உதிர்தல் என்பது சாதாரண ஒன்றாகி விட்டது.இதற்கு முக்கிய காரணம் பொடுகு.முடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காதது,முடிகள் வறட்சி தன்மையை அடைதல் போன்ற காரணங்களால் இந்த பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து நீங்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏதேனும் ஒன்றை முறையாக பாலோ செய்து பயன்பெறுங்கள்.

பொடுகு பாதிப்பில் இருந்து மீள 8 அற்புத வழிகள்:-

1.தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது அவசியமான ஒன்றாகும்.இந்த தேங்காய் எண்ணெயில் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அதனை தலைக்கு தேய்ப்பதால் பொடுகு பாதிப்பு குறையும்.

2.மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் வெந்தயத்தை பொடி செய்து அவற்றை தலைக்குத் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறைந்து பொடுகு தொல்லை நீங்கும்.

3.தயிர் பொடுகு தொல்லைக்கு சிறந்த தீர்வாகும்.இந்த தயிரை பாசிப்பயறு மாவுடன் கலந்து தலைக்கு தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைத்து தலையை நன்கு அலச வேண்டும்.இவ்வாறு செய்தால் பொடுகு பாதிப்பு குறையும்.

4.கற்றாழையை தோல் நீக்கி அவற்றில் இருந்து சாறு எடுத்து தலை முடியின் வேர் பகுதியில் படும் படி தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பின்னர் சீயக்காய் பயன்படுத்தி குளித்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.

5.வேப்பிலை மற்றும் துளசி சாற்றை கலக்கி தலைக்கு தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதேபோல் துளசி மற்றும் கருவேப்பிலை விழுதுடன் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது.

6.வாரம் ஒருமுறை நெல்லிக்காய் பொடி,வெந்தயப் பொடி,தயிர்,கடலைமாவு ஆகியவற்றை மிக்ஸ் செய்து தலைக்கு தேய்த்து குளிப்பது பொடுகு தொல்லைக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.

7.சின்ன வெங்காயத்தை அரைத்து அவற்றின் சாற்றை எடுத்து தலைக்கு தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிப்பது கூந்தலுக்கு மிகவும் நல்லது.

8.அற்புத குணங்கள் கொண்ட அருகம்புலில் சாறு எடுத்து அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்ச வேண்டும்.பின்னர் ஆறவைத்து அவற்றை முடிகளுக்கு தேய்ப்பதினால் பொடுகு பிரச்சனை தீரும்.

Previous articleடெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!
Next articleஉங்கள் வீட்டில் தெரியாமல் கூட இந்த 2 தவறுகளை செய்து விடாதீர்கள்!! பணம் வந்த வழியே சென்று விடும்!!