நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்!

Photo of author

By Parthipan K

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்!

Parthipan K

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். இவ்வாறு நரைமுடி நமக்கு ஏற்பட காரணம் நம் உடலில் வைட்டமின் குறைபாடாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டால் இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்நிலையில் தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் இயற்கை முறையில் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் கற்பூரவள்ளி இலை எடுத்துக் கொள்ள வேண்டும்.8 இலைகள் எடுத்துக் கொள்ளலாம். அதனை அடுத்து அவுரி இலை பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிறிதளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கற்பூரவள்ளி இலையை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதன் சாரை மட்டும் நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதில் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நாம் எடுத்து வைத்துள்ள அவுரி இலை பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை நரைமுடி இருக்கும் இடத்தில் நன்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நரைமுடி மறைந்து கருமை பெறும்.