உங்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றதா? கொலஸ்ட்ரால் உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்!

0
113

உங்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றதா? கொலஸ்ட்ரால் உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்!

கொலஸ்ட்ரால் என்பது உடலில் அளவுக்கு மீறி உருவாகுவதால் பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. கொலஸ்ட்ரால் சில சமயங்களில் மரணத்தை உண்டாக்கும் வாய்ப்பு கொண்டது. இவை ரத்தத்தில் காணப்படும் மெழுகாகும்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். இந்த பதிவின் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ஏற்படும் பல அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முதல் அறிகுறியாக கால் வலி. அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும் போது கால்களுக்கு ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படும் அதனால் பாதங்களில் வலி ஏற்பட்டு தோலின் நிறம் மாற்றம் அடையும் சில நேரங்களில் கால்களின் வெப்பநிலை மிகவும் குறைந்த கால்கள் குளிர்ச்சியாக உணரப்படும்.

இந்த அறிகுறிகள் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக பல நேரங்களில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேர தொடங்கும் அதனால் மார்பு வலி ஏற்படுகிறது.

சில சமயங்களில் இந்த வலி படிப்படியாக அதிகரிக்கும் சில நேரங்களில் அதை திடீரென்று உயர தொடங்குவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் கூறுகின்றன.

கொலஸ்ட்ரால் என்பது அனைவருக்கும் எளிதில் வருவதல்ல புகை பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு தான் கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.