இன்று பெண்களைவிட ஆண்களுக்கு தான் சர்க்கரை நோய் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.சர்க்கரை நோய் அதிகரித்தால் ஆண்மை குறைபாடு,விறைப்புத் தன்மை பிரச்சனை,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
இந்த பாதிப்புகளில் இருந்து மீள இங்கு சொல்லப்பட்டுள்ள நாட்டு வைத்திய முறையை தினமும் பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)கல்யாண முருங்கை இலை பொடி – 5 கிராம்
2)முருங்கை கீரை பொடி – 5 கிராம்
3)தவசி கீரை பொடி – 5 கிராம்
4)தண்ணீர் – ஒரு டம்ளர்
செய்முறை விளக்கம்:-
கல்யாண முருங்கை இலை பொடி,தவசி கீரை பொடி மற்றும் முருங்கை கீரை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இந்த மூன்று கீரைகளையும் வெயிலில் காயவைத்து பொடித்து வைத்தும் பயன்படுத்தலாம்.
முதலில் இந்த மூன்று பொடிகளில் இருந்தும் ஐந்து கிராம் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 5 நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டு போட்டு பானத்தை சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
பிறகு இந்த பானத்தை டம்ளருக்கு வடிகட்டி பருக வேண்டும்.இந்த மூன்று பொடியை வைத்து சூப் செய்தும் பருகலாம்.இதை தொடர்ந்து செய்து வந்தால் ஆணுறுப்பு விறைப்புத் தன்மை பிரச்சனை சரியாகும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)ஜாதிக்காய் பொடி – 5 கிராம்
2)ஜாதிபத்திரி பொடி – 5 கிராம்
3)பசு நெய் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
சூப்பர் மார்க்கெட்,நாட்டு மருந்து கடையில் ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.
பிறகு இதை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் கால் தேக்கரண்டி அளவு பசு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அரைத்த ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி பொடி தலா 5 கிராம் அளவிற்கு அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.விறைப்புத் தன்மை பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)பூனைக்காலி விதை – 20 கிராம்
2)பசு நெய் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
நாட்டு மருந்து கடையில் பூனைக்காலி விதை கிடைக்கும்.200 வாங்கினால் 20 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
முதலில் பூனைக்காலி விதையை வாங்கி முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த பூனைக்காலி விதை பொடியை கொட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி பசு நெய் சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பூனைக்காலி உருண்டையை தினம் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் விறைப்புத் தன்மை பிரச்சனை சரியாகும்.